அருவக்காடு குப்பைத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் ஜும்ஆ உரை : அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை வேண்டுகோள்

Date:

கொழும்பிலிருந்து குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டுக்கு கொண்டு வரப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் நகரில்  ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே இது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில், எதிர்வரும் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆ குத்பாக்களை ‘சுற்றுச் சூழலை பாதுகாப்போம் மற்றும் ‘அறுவக்காடு குப்பைத் திட்டத்தால் ஏற்படும் சூழல் அச்சுறுத்தல்’ என்ற தலைப்புகளில் ஜூம்ஆ உரை நடாத்துமாறு உலமாக்களிடத்திலும் (கதீப்மார்கள்) மற்றும் ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினரிடமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கவனத்தில் கொண்டு கிளீன் புத்தளம், சர்வமதக்குழு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகம் ஒன்றிணைந்து அறுவக்காடு குப்பைத் திட்டத்தை நிறுத்துவதற்கு பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில்!

இலங்கையில் பயங்கரவாதம் மற்றும் அது தொடர்பான குற்றங்களைக் கையாள்வதற்கான சட்டக் கட்டமைப்பை...

ஹரக் கட்டா – கெஹெல்பத்தர பத்மே இடையில் சிறையில் மோதல்!

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நதுன் சிந்தக்க...

தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பலத்த மழைக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு வடகிழக்கே வடமேற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வு...

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ‘Smart Boardகள்’ வழங்க நடவடிக்கை: பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ், நாடு...