ஆசிரியர்களுக்கு ஆரம்பமாகவுள்ள புதிய பயிற்சி நெறிகள்!

Date:

நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பாடசாலைகளிலிருந்து இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்க அரசு அங்கீகாகரம் அளித்துள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  அமைச்சரவைவில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டமானது, விஞ்ஞானம் , தொழில்நுட்பம் (Technology), கணிதம் (Methametics), கலை (Arts) மற்றும் கணிதம் ஆகியவற்றைக் குறிக்கும் ஸ்டீம் (STEAM) கருத்தை மையமாகக் கொண்டு கல்வி முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களை மாணவர்களுக்கு மேம்பட்ட தரமான கல்வியை வழங்க உதவுவதே குறித்த பயிற்சித் திட்டத்தின் நோக்மாகும்.

அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து மாகாணங்களிலும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 7,500 ஆசிரியர்களுக்கு மூன்று கட்டங்களாக Skills College of Technology  (SCOT CAMPUS) எனும் நிறுவனத்தின் மூலம் பயிற்சிகள் நடத்தப்ப்படவுள்ளன.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...