இன்று வாக்களிக்க செல்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Date:

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன.

காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணி வரையில் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு  அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்க வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த பின்வரும் ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு,செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், பொது சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை,  மதகுருமார்களுக்கான அடையாள அட்டை.

தேசிய அடையாள அட்டை தகவலை உறுதிப்படுத்தும் கடிதம், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை, ஏனைய நபர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை மேற்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 9 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க முடியும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காகவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடத்தும் வகையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....

போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய இன்று முதல் புதிய முறை!

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...