இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உலப்பனை கிளையின் வருடாந்தப் பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை, (01) கம்பளை நகரில் ஜமாஅத் உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரமுகர் அமர்வின் போது, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி, கங்க இகல கோரலே பிரதேச செயலாளர் எஸ்.எம்.சி. சமரக்கூன், மத்திய ஆலோசனை சபை உறுப்பினர் Z.A.M. பவாஸ், மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உலப்பனை கிளை பொறுப்பாார் முகம்மது பாஸில் ஆகியோர் இணைந்து வறுமை ஒழிப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.


