லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய 7,600 இலங்கை தொழிலாளர்கள் லெபனானில் பணிபுரிந்து வருவதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் நாட்டின் தென்பகுதிகளில் வசிப்பதாக லெபனான் தூதுவர் கபில ஜயவீர, சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் அமைப்பை குறிவைத்து, நாட்டின் வடக்குப் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இதில், சிறுவர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்காணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், உடன் போர் நிறுத்தத்திற்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்துள்ள போதிலும், இஸ்ரேல் அதனை மறுத்துள்ளது.
இந்நிலையிலேயே, லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் மோதல் பிரதேசங்களில் வசிக்கவில்லை என லெபனான் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.