இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக நியுயோர்க்கில் போராட்டம்

Date:

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக இன்று பலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக இஸ்ரேலிய பிரதமர் பென்ஞமின் நெத்தன்யாகு நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஐ.நா. தலைமையகத்திற்கு முன்பாக இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பஸ்தீன கொடிகளையும் பாதாதைகளையும் இஸ்ரேல் பிரதமரின் உருவப் படங்களையும் ஏந்தியவாறு இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிறுவர்களை கொலை செய்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் பணயக் கைதிகளை காப்பாற்ற இராணுவத்தின் ஊடாக அன்றி அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பிரதானமாக இரண்டு தரப்புக்கும் இடையே தொடரும் யுத்தத்தை உடனடியாக சர்வதேசம் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பலஸ்தீன பகுதிகளில் யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள யூத – இஸ்ரேலிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் என தங்களை காண்பித்துக் கொண்டவர்களினாலேயே இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இவர்களது இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் பெரும் பதற்றமானதெரு சூழல் காணப்பட்டதோடு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...