உயிரிழந்த பின்னர் ஒவ்வொரு நபரின் உடலங்களையும் அகற்றுகின்ற விதம் தொடர்பாக தீர்மானிக்கின்ற உரிமையை குறித்த நபருக்கே வழங்குவதற்காகவும் தனது உடலத்தை அகற்ற வேண்டிய விதம் பற்றிய விருப்பத்தை தெரிவிக்காதவர்கள் உயிரிழக்கின்ற போது உயிரிழந்தவரின் அபிலாஷைகள் மற்றும் மத ரீதியான கலாசார அல்லது தனிப்பட்ட நம்பிக்கைகளை கருத்தில்கொண்டு உயிரிழந்தவரின் உடலத்தை நல்லடக்கம் செய்யவேண்டுமா அல்லது தகனம் செய்யவேண்டுமா என்பதை தீர்மானிக்கும் உரிமை அந்நபரின் நெருங்கிய உறவினருக்கு ஒப்படைக்கின்ற வகையில் ஏற்பாடுகளை செய்வதற்காக சட்ட வரைஞரால் தாயரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளதாக செவ்வாயன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த ஒருங்கிணைவு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.