ஊவா மாகாணம் – மொனராகல மாவட்டத்தின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்கள் 20 பேர் மற்றும் ஆசிரியர் ஒருவருக்கு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதிய நேர இடைவேளையின் பின்னர், பாடசாலையில் பொருத்தப்பட்டிருக்கும் நீர்ததாங்கியில் சேமிக்கப்பட்டுள்ள நீரையே பருகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தண்ணீரை குடித்தவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, பாடசாலை நிர்வாகம் தண்ணீர் தொட்டியை சோதனை செய்ததில், தண்ணீர் தொட்டிக்குள் எலி இறந்து கிடந்தது தெரியவந்தது.
எவ்வாறாயினும், தண்ணீர் தொட்டியில் எலி இறந்த நிலையில் தண்ணீரை குடித்ததே இந்த ஒவ்வாமைக்கான காரணமா என்பது இதுவரை தெரியவரவில்லை.
எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எவரது நிலைமையும் கவலைக்கிடமாக இல்லை என தனமல்வில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பிரிவுக்கு பொறுப்பான தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.