எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒக்டோபர் 26 ஆம் திகதி நடைபெறும் என காலி மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 09 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் இன்று வியாழக்கிழமை (12) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.