புத்தளம் பகுதியைச் சேர்ந்த முஹம்மது முபாரிஸ் மற்றும் அவரது குடும்பம், கத்தாரிலிருந்து உம்ராவிற்கு சென்று திரும்பும் வழியில் இடம்பெற்ற, கார் விபத்தில் முபாரிஸின் கர்ப்பிணி மனைவியான பாத்திமா ஷாபாரிஜ் (33) உயிரிழந்துள்ளார்.
சவூதி- கத்தார் எல்லையான சல்வா பகுதியில் கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் கர்ப்பிணி தாயும் வயிற்றில் இருந்த குழந்தையும் மரணமடைந்தனர். ஏனையவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனம் ஓட்டும் போது சாரதி தூங்கியதாலே இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த கர்ப்பிணி தாயின் உடல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு இன்று (30) அடக்கம் செய்யப்படும்.