கிழக்குப் பல்கலைக்கழக ஆய்வரங்கில் மெத்திகா: சர்வதேச தொற்றுநோயியல் சங்க அங்கத்தவரிடமிருந்தும் எதிர்ப்பு

Date:

நவம்பர் 28 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் பிராந்திய சவால்களை எதிர்கொள்வதற்கான ‘அறிவியல் அணுகுமுறை’ எனும் தொனிப் பொருளிலான ஆய்வரங்குக்கு வளவாளராக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் மெத்திகா எஸ். விதானகே அழைக்கப்பட்டிருப்பதற்கான எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்து வருகின்றன.

இலங்கை மருத்துவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு குழுவின் முன்னாள் அங்கத்தவரும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் குடும்ப மருத்துவத் துறை ஸ்தாபகருமான Dr. ருவைஸ் ஹனிபா MBBS DFM PgDip MSc MD FCGP MRCGP CTHE, SEDA அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் உப வேந்தர்களுக்கு கடந்த வாரம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

பிரதான பேச்சாளராக அழைத்துள்ள மெத்திகா எஸ் விதானகே தார்மீகப் பண்புகளோ, நெறிமுறைகளோ விஞ்ஞான ரீதியான ஒருமைப்பாடுகளோ அற்ற மதிப்பிழந்து போன ஒருவராவார்.

கோவிட் 19 சடலங்களை அகற்றுவதில் அவரது விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, தேசியப் பிரச்சினை ஒன்றைத் தீர்ப்பதில் விஞ்ஞானிகளையும் அவர்களது அணுகுமுறைகளையும் கேலிக்குள்ளாக்கியிருக்கிறது.

கோவிட் 19 சடலங்களை அப்புறப்படுத்துவது தொடர்பில் சர்வதேச வழிகாட்டல்களையும் கோவிட் 19 நடைமுறைகளையும் மீறி அவர் வழங்கிய அறிவுக்கொவ்வாத தீர்ப்பு, பலவந்த எரிப்பு மட்டுமே என்ற விஞ்ஞானத்துக்கு மாற்றமான நடைமுறையைக் கொண்டு வந்து பின்னர் மன்னிப்புக் கேட்கும் நிலைக்கு அரசாங்கத்தைத் தள்ளியது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சர்வதேச தொற்றுநோயியல் சங்கத்தின் அங்கத்தவரும், சுகாதார அமைச்சின் விசேட சமூக வைத்தியரும், கொழும்பு, பேராதெனிய, யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களின் வருகைதரு விரிவுரையாளரும்,யாழ்ப்பாண மருத்துவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் (2014/15), கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துக்கான முதலாவது வருகை தரு விரிவுரையாளருமான Dr முரளி வல்லிபுரநாதன் MBBS (Jaffna), FC in Ornithology, PGD (Population Studies), MSc (Colombo), MD (Community Medicine), FCCP (SL), FRSPH (UK) அவர்களும் கிழக்குப் பல்கலைக்கழக ஆய்வரங்கில் மெத்திகா விதானகே கலந்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சிறந்த இலங்கைக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தொலைநோக்கினையும் பணிக்கூற்றையும் செயல்படுத்துவதற்குக் கடமைப்பட்டிருக்கும் உங்களுக்கு நீங்கள் அங்கம் வகிக்கும் இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளிப்படுத்தப்பட்ட தொலைநோக்கு, பணிக் கூற்று அறிக்கைகள் மற்றும் பெறுமானங்களை நினைவூட்டுகிறோம்.

எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த வகையில் மெத்திகா விதானகேயை வளவாளராக அழைத்திருப்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என Dr முரளி வல்லிபுரநாதன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் வீ, கனகசிங்கத்தைக் கேட்டுள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...