குரங்கு காய்ச்சல் நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Date:

எம் பொக்ஸ் (mpox) எனப்படும் குரங்கு காய்ச்சல் நோய் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக  இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குரங்கு காய்ச்சல் நோய் அறிகுறியுடன் முதலாவது நபர் நேற்று (9) அடையாளங்காணப்பட்டுள்ளார்.

மேலும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது நோயின் தன்மை குறித்துத் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருவதால் இந்த நோய் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நோய் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருப்பதால் சமூகத்திற்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குரங்கு காய்ச்சல் தொடர்பில் விமானநிலையங்கள் மற்றும் முக்கியமான சுற்றுலாத்தளங்களிலும் அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...