குழந்தைகளின் கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்பு: வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

Date:

அறியாமல் குழந்தைகளுக்கு பரசிட்டமால் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தேசிய நச்சு தகவல் மையத்தின்  தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்

மேலும் வைத்தியரின் பரிந்துரைகளில் பரசிட்டமால் இருந்தால் மட்டுமே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் எனினும் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது அதிக அளவு பரசிட்டமால் கொடுக்கப்படுவதால் குழந்தைகளின் நிலைமை  மேலும் மோசமான  நிலைமைக்குள்ளாகும் வாய்ப்புள்ளதாகவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டார்.

சில பெற்றோர்கள் காய்ச்சலை கண்டறிந்தால் பரசிட்டமாலை அதிக அளவில் கொடுக்கின்றனர். இவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி திட்டமிடப்பட்ட அளவை வழங்க அறிவுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் குழந்தைக்கு பரசிட்டமால் மருந்து கொடுக்க வேண்டுமா என்றும், மேலும் குழந்தைக்கு கூடுதல் டோஸ் பரசிட்டமால் கொடுக்க வேண்டுமா என்று கட்டாயம்  மருத்துவ ஆலோசனையை பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக ஏதேனும் மேலதிக ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள 0112 686 143 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...