புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபியாவின் தேசிய தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு தனது முதலாவது உத்தியோகபூர்வ ஈடுபாட்டை பதிவு செய்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் மிகவும் முக்கியமான மற்றும் பிரிக்க முடியாத உறவு காணப்படுவதாகவும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் இவ்வாறே தொடர்ந்தும் நிலைநாட்டப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.