சாதாரண தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவி

Date:

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம், காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மாணவி ஹிருணி மல்ஷா குமாரதுங்க, நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இரண்டாம் இடத்தை கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் குலுனி மெத்சர மற்றும் குருநாகல் மலியதேவ பெண்கள் கல்லூரியின் விமன்சா ஜயனாதி ரத்னவீர ஆகியோர் பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த வருடத்தின் பெறுபேறுகளின் படி, மூன்று மாணவிகள் நாடளாவிய ரீதியில் நான்காம் இடத்தை பெற்றுள்ளனர்.

கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரியின் சேஷானி செஹன்சா ஜயவர்தன, நுகேகொட அனுலா கல்லூரியின் மெதுகி சாமோதி பெரேரா மற்றும் காலி சங்கமித்த பெண்கள் கல்லூரியின் நடுன் பமுதித ரணவக்க ஆகியோரே இவ்வாறு நான்காம் இடத்தை பெற்றுள்ளனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...