ஜனாதிபதித் தேர்தலை போன்று பொதுத் தேர்தலையும் அமைதியாக நடத்துவோம்: பெப்ரல்

Date:

ஜனாதிபதித் தேர்தலை போன்று பொதுத் தேர்தலையும் அமைதியாக நடத்துவோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மற்ற ஆண்டுகளைப் போலன்றி, இந்த ஆண்டும், ஜனாதிபதித் தேர்தல் நாளிலும், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் எந்தவொரு குற்றச் செயல்களும் பதிவாகவில்லை.

பொதுத் தேர்தலும் அவ்வாறே நடத்தப்படும் என நம்புவதாக  தெரிவித்துள்ளார்.

மாறுபட்ட அரசியல் கருத்தைக் கொண்ட புதிய ஜனாதிபதியின் கீழ் நடைபெறும் பொதுத் தேர்தல் என்பதால், அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யாமல் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என பெப்ரல் அமைப்பு நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வரும் நிலையில், அடுத்த பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...