ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் செயலாளராக சனத் நந்திக குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சனத் நந்திக குமாநாயக்க களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார்.
நந்திக சனத் குமாநாயக்க களனிப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி அதிகார சபையில் கலாநிதி பட்டம் பெற்றவர்.
அவர் இலங்கை சுங்கத்தின் பிரதிப் பணிப்பாளராகவும் நவீனமயமாக்கல் செயல்முறையின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, தற்போது இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து காலியான அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் லக்ஷ்மன் நிபுண ஆராச்சி தெரிவு செய்யப்படவுள்ளார்.