தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தினால் நேற்று (18) நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரி பெல்லன்வில தம்மரதன தேரர், அகலகட சிறிசுமண தேரர் மற்றும் கொட்டபிட்டிய ராகுல தேரர் ஆகியோரினால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் இன்று (18) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்நிலையில், முதன்மையான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் நீதிபதி யசந்த கோதாகொடவினால் இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.