தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி வேண்டுகோள்

Date:

2024 ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையமும் தொடர்புடைய அதிகாரிகளும் பணியாற்றுவார்கள் என நம்புவதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பணியாற்றுவார்கள் என நம்புகிறோம்.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பொது அமைதியை பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில், நாட்டில் உச்சபட்ச அமைதியான சூழலைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்புப் பிரிவினரைக் கேட்டுக்கொள்வதுடன்,  நாட்டில் அமைதியைப் பேணுவதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...