தேர்தல் தினத்தில் ஊரடங்கு: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!

Date:

ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பு தினத்தன்று ஊரடங்கை பிரகடனப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தேர்தல் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்களுக்கு தேவையான நேரத்தில் உதவுவதற்கு பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை அறிவிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் இது குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது எனவும் ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு குறித்து அவசியமான உத்தரவுகளை வழங்கியுள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...