தேர்தலுக்காக வாக்குப்பதிவு மையங்களாகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள், இம்மாதம் 19 ஆம், 20 ஆம் திகதிகளில் தயார்படுத்தப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு வசதியாக, பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து கல்வி அமைச்சுக்கு, முறையான கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
“2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பின்னர் வாக்கு எண்ணும் நிலையங்களைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும்” எனவும், அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைகளை பரிசீலித்து, தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு, விடுமுறை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக, கல்வி அமைச்சு இதற்கு முன்னர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ.காதிர் கான் )