ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் தந்தை இன்று (22) டுபாய் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவைகள் இல்லாததால் டுபாய் வழியாக அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவும் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
அத்துடன் அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்தியாவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கும் சென்றுள்ளனர்.
இத்தேகந்தவின் சத்தாதிஸ்ஸ தேரர் ஹொங்கொங் சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.