நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தில் நஷ்ட ஈட்டுத் தொகையான 75 மில்லியன் ரூபாவை முழுமையாக செலுத்தாதமையால் நிலந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் அதிபர் இன்று (27) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதற்கமைய, ஒக்டோபர் 7ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு நிலந்தவுக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறு பிரதம நீதியரசர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.