நீதிமன்றத்தை அவமதித்த குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்; உயர்நீதிமன்றம்

Date:

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர்  நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய  நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் விசா வழங்கும் நடைமுறை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை இடைநிறுத்தி வைக்குமாறு தான் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதன் மூலம் குடிவரவுகுடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நீதிமன்றத்தை அவமதித்தார் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஹர்ச இலுக்பிட்டிய மின்னணு பயண அங்கீகார செயன்முறையையை மீள நடைமுறைப்படுத்துமாறு ஆகஸ்ட் 2ம் திகதி உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறினார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர்  நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடையும் வரை நீதிமன்றத்தில் உள்ள சிறைக்காவலில் வைக்குமாறு உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...