நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்: நாட்டிற்கு வருகைத்தந்த சர்வதேச கண்காணிப்பாளர்கள்!

Date:

ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக 100க்கும் மேற்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் ஏற்கனவே சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் (EU) சேர்ந்த 43 பேர், பொதுநலவாய நாடுகளை (Commonwealth) சேர்ந்த 22 பேர் மற்றும் தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பிலிருந்து (ANFREL) 6 பேரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் எதிர்வரும் நாட்களில், 34 ஐரோப்பிய ஒன்றிய பார்வையாளர்கள் மற்றும் தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பிலிருந்து 3 பிரதிநிதிகளும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அருகில் அமைந்துள்ள நாடுகளைச் சேர்ந்த 7 பேரும் இந்தச் செயற்பாட்டில் மேலும் இணைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 22 தேர்தல் தொகுதிகளிலும் விரிவான கண்காணிப்பை உறுதி செய்வதற்காக பார்வையாளர் குழுக்கள் தங்களது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...