பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம்: பிரதமரின் உத்தரவு

Date:

அரசியல்வாதிகளை  பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைப்பதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (26) வலியுறுத்தியுள்ளார்.

கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், அரசியல்வாதிகளை பாடசாலைகளுக்கு அழைப்பதன் மூலம் மாணவர்களின் கல்வியில் கவனம் சிதறி பாடசாலை சூழலை அரசியலாக்கும் அபாயம் ஏற்படும் என தெரிவித்தார்.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் செயல்முறை முறையாக நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாணவர்களின் மனநலம் குறித்து உரையாற்றிய அவர், தற்போதைய தலைமுறையினர் கணிசமான சவால்களை எதிர்கொள்கின்றனர், இதில் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை மாணவர்களிடையே மன அழுத்தத்தை அதிகரித்துள்ளன.

அண்மைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவுக்கு விரைவான மற்றும் நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...