முஸ்லிம் சமய,கலாசார திணைக்களத்தின் பணிப்பாளருக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவருக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று நேற்றைய தினம் (02) சவூதி அரேபிய தூதுரகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களின் அழைப்பின் பேரில் முஸ்லிம் சமய, கலாசர திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.
திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் அவர்களுடன் அஷ். எம்.எம்.எம். முப்தி அவர்களும் திணைக்களம் சார்பாக இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.