எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகளை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பது தொடர்பிலான செயலமர்வொன்று அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தினால் கடந்த ஞாயிறன்று (1) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் உப தலைவர் பௌசர் பாரூக் தலைமையில் கொழும்பில் நடந்த இந்தச் செயலமர்வில் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முஸ்லிம் சமூகம் முன்வைக்க வேண்டிய பல கோரிக்கைகளை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் எடுத்துக் காட்டினார்.
அத்துடன் கடந்த கால தேர்தல் அனுபவங்களை முன்னாள் கொழும்பு மாநகர மேயர் ஒமர் காமில் பகிர்ந்து கொண்டார்.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் தற்போதைய நிலை தொடர்பிலான கள ஆய்வொன்றும் சபையில் முன்வைக்கப்பட்டது.