மூன்றாவது முறையாகவும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி

Date:

நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டது போல எவரும் 50 வீதம் மற்றும் வாக்கினை பெறாததால் 2ஆவது வாக்கெண்ணும் நடைமுறைக்கு செல்வதென தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல் சட்டத்தின் கீழ் தீர்மானித்திருக்கின்றார்.

அந்த வகையில் 39 வீதம் பெற்ற அனுரகுமாரவும் 34 வீதம் பெற்ற சஜித் பிரேமதாசவும் போட்டியில் தொடர்ந்து நிலைத்திருப்பர்.

ஏனைய 36 வேட்பாளர்களும் தோல்வியடைந்தவர்களாக கருதப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணையாளர்கள் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசங்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தவராகக் கருதப்படுகிறார். இது இவர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு தோல்விடைகின்ற 3ஆவது சந்தர்ப்பமாகும்.

போட்டியில் தொடர்ந்து இருக்கின்ற சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திசாநாயக்க இருவருக்குமிடையில் நடைபெறும் விருப்பு வாக்கு இடையில்  விருப்பு வாக்குகளை எண்ணியதன் பின்  இருவரில் அதிக வாக்குகளை பெறும் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...