வளமான, சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்ப பங்களிப்பு செய்யும் ஊடக செயலமர்வு மள்வானையில்…!

Date:

மாணவர்களே செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்வது இந்த யுகத்தின் தேவையாகும். நீங்கள் அதனை முறையாகக் கற்றுக் கொள்ளுங்கள் எங்கள் கல்வி முன்னேறத்திற்கும் சமூக எழுச்சிக்கும் அதனைப் பயன்படுத்துங்கள் என களனி வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். தௌசீர் (நளீமி) குறிப்பிட்டார்.

மள்வானை மக்கள் மன்ற ஏற்பாட்டில் அரச அங்கீகாரம் பெற்ற பஹன மீடியா தொடர்பான நிறுவனத்தின் பஹன அகடமி நடாத்திய டிஜிட்டல் மீடியா செயலமர்வு அண்மையில் அல்முபாரக் தேசிய கல்லூரியின் லாபிர் ஹாஜியார் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இச்செயலமர்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதிபர் எஸ்.எச்.எம் நயீம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இரண்டு நாள் செயலமர்வில் நியூஸ்நவ் செய்தித்தளத்தின் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளர் அஷ்அஷய்க் இஸ்பஹான் ஷாப்தீன் தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரி பவாஸ் அன்பியா ஆகியோர் வளவாளராக கலந்துகொண்டனர்.

க.பொ.த. உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்கும் 70 மாணவ,மாணவிகள் இந்த இரு நாள் செயலமர்வில் பங்குபற்றினர்.

தொடர்ந்தும் உரையாற்றிய பணிப்பாளர் தௌசீர் அவர்கள்,

அண்மையில் கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா கல்வித்துறை உயர் அதிகாரிகள் எங்கள் மத்தியில் உரையாற்றும் போது குறிப்பட்டார் அவர் மதகுருமார்களுக்கான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்தாராம், அவருக்கு ஆச்சர்யமாக இருந்ததாம் அந்த பிக்குகள் மாநாட்டில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பௌத்த மதத்தை எவ்வாறு கற்றுக்கொடுப்பது அந்த மதத்தின் வளர்ச்சிக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது எவ்வாறு என்பன தொடர்பாக ஆராய்வதற்காகவே அந்த நிகழ்வு நடத்தப்பட்டதாம்.

நான் நினைக்கிறேன் எமது சமூகத்தின் எந்த அமைப்பும் இதுவரை இவ்விடயம் தொடர்பாகவும் ஆராய நடவடிக்கை எடுக்கவோ அல்லது அது தொடர்பாக சிந்திக்கவோ இல்லை.

மேலும் எந்தவொரு மத்ரஸாவிலும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை பயன்படுத்த இஸ்லாத்தை எவ்வாறு பிரபல்யப்படுத்துவது மக்களுக்கு எவ்வாறு கற்றுக்கொடுப்பது என்பன தொடர்பாகக் கவனம் செலுத்தப்படவில்லை.

ஆனால் நாங்கள் கம்பஹா, களனி வலய இஸ்லாம் பாட ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இஸ்லாத்தைக் எவ்வாறு கற்றுக்கொடுப்பது தொடர்பான கருத்தரங்கொன்றை நடத்தவுள்ளோம்.

-இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்தப்படவேண்டும்.

ஒரு மோசமான சினிமாப் படத்தைப் பார்ப்பதாக இருந்தால் அதற்காக நகருக்கு பஸ்ஸில் பிரயாணம் செய்து அதற்காக செலவுகள் செய்து சில சிரமங்களுக்கு மத்தியில் தான் பார்க்க வேண்டும். ஆனால் இன்று மிக இலேசாக யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்தே நாம் இத்தொழில்நுட்பத்தை பயன்டுத்தி அந்த படத்தை பார்க்க முடியும்.

எனவே தான் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு குறிப்பிடுகிறது எவ்வாறான சூழலில் நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள் நீங்கள் வெற்றியாளர்களாவீர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஊடகப்பயிற்சி நெறியில் டிஜிட்டல் யுகத்தின் பிரவேசத்துக்குத் தேவையான கைபேசி செயல்நுட்பம் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் சமூக மாற்றத்துக்கான சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் தொடர்பாடல் வழிமுறைகள் தொடர்பான விரிவுரைகளும் இடம்பெற்றன.

மேலும் இச்சயெலர்வில் இறுதியில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் வைபவத்துக்கு பஹன மீடியா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மல்வானை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித்தலைவர் அஷ்ஷெய்க் ஹஜன் முபாரக் (பஹ்ஜி) எம்.ஐ.நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எப். இம்ரான் அல்முபாரக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியர் ரிஸ்வான் மற்றும் அமெல்வா நிறுவனத்தின் கணக்காய்வாளர்  இர்ஷாத் ஹாஜியார் மக்கள் மன்ற செயலாளர் ஹில்மி மர்சூக் ஹாஜியார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பஹன மீடியா நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் (கபூரி) தனதுரையில்,

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...