வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை!

Date:

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் கடமைகளுக்காக 1,358 பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய அந்த பேருந்துகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

மேலும் தேர்தல் தொடர்பான பொலிஸ் பணிகளுக்காக 175 பேருந்துகள் வழங்கப்பட உள்ளன.

இதேவேளை, வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக இன்றும் (20) நாளையும் (21) விசேட தொலை தூர பேருந்து சேவையொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டைக்கும் காங்கேசந்துறைக்கும் இடையில் இன்று விசேட புகையிரதத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளை மறுதினம் 21ம் திகதியும் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கசந்துறை வரையிலும், நாளை மற்றும் 22ம் திகதிகளில் காங்கசந்துறையில் இருந்து கொழும்பு வரையிலும் இந்த ரயில் சேவையில் ஈடுபடவுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அநுராதபுரத்திற்கும் மஹவவிற்கும் இடையிலான வீதியின் பழுதடைந்த நிலை காரணமாக புகையிரதம் இயங்காது என புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...

வரலாற்றைத் தேடும் வாசகர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில்..!

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் லிபியாவை சேர்ந்த கலாநிதி அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி...

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்...