10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் இன்று சட்டப்பேரவை தேர்தல்!

Date:

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 24 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

அங்கு 10 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக காஷ்மீரில் 16, ஜம்முவில் 8 என மொத்தம் 24 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக அங்கு தேர்தல் நடப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை ஏற்பட்டிருந்த ஒரு மிகப்பெரிய மாற்றம் என்னவெனில், எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை.

இத்தேர்தலில், களமிறங்கும் முக்கிய கட்சிகளாக பாஜக, காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக்கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) , அவாமி இத்தேஹாத் கட்சிகள் உள்ளன. இங்கு, பாஜக ,காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக்கட்சி என மும்முனைப்போட்டி நடைபெறுகிறது.

முதல் கட்ட தேர்தலில் வாக்காளிக்கும் வாக்காளர்கள் 23,27,580. இவர்களில் ஆண் வாக்காளர்கள் 11,76,462 , பெண் வாக்காளர்கள் 11,51,058. மொத்தமுள்ள 3276 வாக்குச்சாவடிகளில், 14,000 தேர்தல் பணியாளர்கள் தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.

கூடுதலாக, 2019 இல் ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நடைபெறும் சட்டமன்றத்தேர்தல் என்பதால் இத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முதற்கட்ட தேர்தலுக்காக ராணுவம், சிஆர் எப் உள்ளிட்டவை காஷ்மீர் துறையுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த 10 ஆண்டுகளில் (2014-2024) ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த 10 ஆண்டுகளில் அங்கு உச்சகட்ட தீவிரவாதத்திலிருந்து, உச்சகட்ட  சுற்றுலாவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த 10 ஆண்டுகள் அங்கு மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு வழி வகுத்துள்ளது,” என்று கூறினார்.

 இதனிடையே, “ஜம்மு காஷ்மீர் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்; அனைத்து மக்களும் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்; இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்” என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...