2024 ஜனாதிபதி தேர்தல்: முன்னோடியான விஞ்ஞாபன ஒப்பீட்டு முயற்சி இலங்கையில் ஆரம்பம்

Date:

இலங்கையில் முதன்முறையாக, மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இலகுவாக ஒப்பிட்டு மதிப்பீடு செய்வதற்கான டிஜிட்டல் கருவியை பொதுமக்கள் அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபன ஒப்பீடு என்று பெயரிடப்பட்ட இக்கருவியில், இலட்சிய கோரிக்கைகள் அல்லது கணிப்புகளுக்கு பதிலாக, குறிப்பிடத்தக்க செயல்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன 1,500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இதில் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

இத்தளம் தேர்தல் விஞ்ஞாபன ஒப்பீடு எனும் அம்சத்தைக் கொண்டுள்ளது, இது 15 கருப்பொருள் பகுதிகளின் கீழ் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை வாக்குறுதிகளை ஒன்றுடன் ஒன்று இணையாக ஒப்பிட்டு பார்க்கும் வாய்ப்பை பயனர்களுக்கு வழங்குகிறது.

இங்கு “தேர்தல் விஞ்ஞாபன ஒப்பீட்டு செயல்பாடு ” என்ற பகுதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது!

இது பயனர்களுக்கு தங்கள் கனவு விஞ்ஞாபன அறிக்கையை வடிவமைக்கவும், அவர்களின் விருப்பத்தேர்வுகள் வேட்பாளர்களின் குறிப்பிட்ட செயல்திறனுள்ள வாக்குறுதிகளுடன் எவ்வளவு நெருக்கமாக ஒத்துப்போகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்கவும் முடியும்.

உலகளாவிய ரீதியில் இப்பிரத்தியேக முயற்சி வெரிட்டே ரிசர்ச்சின் Manthri.lk தளத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை, https://manthri.lk/en/presidential-election-manifesto-2024, தளத்தின் ஊடாக அல்லது கீழே உள்ள QR குறியீடு மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...