வரலாற்றில் ஏற்பட்ட காயங்களை மறந்துவிடுவதால் மாறப்போவதில்லை மாறாக அவற்றை நினைவுகூர்ந்து அவற்றால் படிப்பினை பெறுவதால் மட்டும் காயங்களில் இருந்து ஆறமுடியும்.
இந்த ஆழமான கருத்தை இந்த உலகுக்கு சொன்னவர் தென்னாபிரிக்காவின் பிரபல எழுத்தாளரான நாடின் கோர்டிமர் உலகப்புகழ் பெற்ற தென்னாபிரிக்க இலக்கியவாதி.
நெல்சன் மண்டேலாவோடு இணைந்து தென்னாபிரிக்காவில் இனவாதத்துக்கு எதிராக மிகக்கடுமையாக உழைத்த ஒரு பெண்ணாக இவர் கருதப்படுகிறார்.
இவருடைய இலக்கிய பணிகளுக்காக 1991ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
வரலாற்றை மறப்பதாலன்றி வரலாற்றில் ஏற்பட்ட காயங்களை படித்து அவற்றினால் படிப்பினை பெறுவதால் மூலமாகவே நாங்கள் வரலாற்றில் ஏற்பட்ட காயங்களிலிருந்து பரிகாரம் பெறமுடியும் என்பது அவருடைய மிகச்சிறந்த கூற்றாகும்.