இலங்கையின் 9ஆவது ஜனாதிபதி தேர்தல்; வாக்குப்பதிவு ஆரம்பம்

Date:

நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும்  ஜனாதிபதி தேர்தல் இன்று (சனிக்கிழமை)   இடம்பெறவுள்ளது.

இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில்,  17, 140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நாடளாவிய ரீதியில்  13421  வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமார் 63 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன் முப்படையினரும் பாதுகாப்பு நிமித்தம் தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 2 இலட்சத்து 25 ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை அனைத்து தேர்தல் தொகுதிகளுக்குமான வாக்கு பெட்டிகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆவணங்கள் நேற்று காலை கையளிக்கப்பட்டன.

22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் தான் அதிகளவில் தேர்தல் தொகுதிகள் , கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3151 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...