உச்ச அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: சுகாதார அமைச்சில் கடமையேற்ற பிரதமர் ஹரினி அமரசூரிய

Date:

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய சுகாதார அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நேற்றையதினம் (24) சுகாதார அமைச்சில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,

சுகாதாரம் என்பது மிக்க முக்கியமான ஒரு விடயமாக நாம் காண்கிறோம். அரசாங்கம் எனும் வகையில் அதற்காக செய்ய வேண்டிய விடயங்களை உச்ச அர்ப்பணிப்புடன் நாம் மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

அரசாங்கம் எனும் வகையில் நோயாளர்கள் மக்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுடன் இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால, விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...