எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றும் விடயங்கள் தொடர்பில் உலமா சபையும் முஸ்லிம் திணைக்களமும் கலந்துரையாடல்

Date:

நாடு, சமூகம் என்ற ரீதியில் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகளுக்கிடையில் சிநேகபூர்வ சந்திப்பொன்று நேற்று (05) ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

ஜம்இய்யத்துல் உலமா தலைவர் முஃப்தி எம். ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ்,பிரதிப் பணிப்பாளர் என்.நிலோபர் மற்றும் திணைக்கள அதிகாரி எம்.எம்.எம். முஃப்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம். அர்கம் நூராமித் பொருளாளர் அஷ்ஷெய்க் கலாநிதி ஏ.ஏ.அஹ்மத் அஸ்வர் ஆகியோருடன் உப தலைவர்கள், ஏனைய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள்  பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது நாடு சமூகம் என்ற ரீதியில் ஜம்இய்யாவின் கடந்தகால பணிகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பணிகளில் எவ்வாறு இருதரப்பும் இணைந்து புரிந்துணர்வோடு செயலாற்றுவது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

 

 

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...