பலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை 12 மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் 124 நாடுகளின் ஒப்பந்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பிரேரணைக்கு எதிராக 14 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன.
இஸ்ரேல் தொடர்ந்து சர்வதேச போர் விதிகளை மதிக்காமல் காசா மீது தாக்குதலை நடத்தி வரும் நிலையில், காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்று பாலஸ்தீனம் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களித்துள்ளது.
தீர்மானத்திற்கு பெரும்பாலான நாடுகளின் ஆதரவு கிடைத்திருந்தாலும், இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்துவதற்கான முயற்சியை எடுக்காது என்பது இஸ்ரேலின் நடவடிக்கை மூலம் நமக்கு தெளிவாக தெரிகிறது.