ஜனாதிபதி தேர்தலின் போது தவறான தகவல்களை தடுப்பதற்கு TikTok நடவடிக்கை

Date:

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது தளத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க TikTok நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள இக்காலப்பகுதியில், பாதுகாப்பான, உண்மையான மற்றும் நம்பகமான தகவல்களை பயனர்களுக்கு வழங்குவதற்காக TikTok இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதற்காக வலுவான உலகளாவிய திட்டத்தை வகுத்துள்ள TikTok, இந்நாட்டின் தேர்தல் தொடர்பான உள்ளடக்கங்களை கையாள்வதற்காக IFCN அங்கீகாரம் பெற்ற தகவல் சரிபார்ப்பு நிறுவனமான Newschecker உடன் இணைந்து செயல்படுகிறது.

இதன் மூலம் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அடையாளம் காண்பதற்கும், அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், மக்களுடன் முக்கியமான விடயங்கள் குறித்த சரியான தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், Newschecker மூலமாக TikTok சமூக வழிகாட்டுதல்களைப் பாதுகாப்பதற்கு உதவும் முக்கியமான தகவல்களும் வழங்கப்படுகின்றன.

தனது பயனர்களின் அறிவை மேம்படுத்துவதற்கும், தொடர்ச்சியை பராமரிப்பதற்கும் அதிக பங்களிப்பை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்ட உத்திகளுடன் புத்தாக்க தயாரிப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ள TikTok, தேர்தல் பற்றிய மும்மொழிகளிலும் உத்தியோர்பூர்வ தகவல்களை வழங்குவதற்கான மத்திய நிலையத்தை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், தவறான தகவல்களை எளிதாக அடையாளம் காணவும் அவற்றை அறிக்கையிடவும் பயனர்களுக்கு வாய்ப்பளித்துள்ள TikTok, தேர்தல் காலத்தில் முக்கியமான மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்க முடிந்துள்ளது.

அத்துடன், கல்வி உள்ளடக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் பயனர்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும் TikTok நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, மக்களிடையே நம்பகமான தகவல்களை அடையாளம் காணும் திறனை மேம்படுத்தி, தேர்தல் செயல்முறையில் பங்கேற்பை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

TikTok இன் இந்த சமூக வழிகாட்டுதல்கள் தவறான மற்றும் பொய்யான தகவல்களுக்கு எதிராக போராடுவதில் பெரும் பங்காற்றுகின்றன. இந்த வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கங்களை அகற்றுதல், தேடல் முடிவுகளை அங்கீகரிக்கப்பட்ட மூலங்களுக்கு திருப்பி விடுதல், மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அறியும் வாய்ப்பை குறைத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு பல சேவைகளைக் கொண்ட அணுகுமுறையைப் பயன்படுத்த TikTok நடவடிக்கை எடுக்கிறது.

தொடர்ந்து வெளிப்படையான தகவல்களை வழங்கி ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட TikTok, நம்பகமான தகவல் மூலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இது நிபுணர்கள், ஆலோசனைக் குழுக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதோடு, தனது கொள்கைச் கட்டமைப்பை மேம்படுத்தவும் செயல்படுகிறது. TikTok இன் நெறிமுறைகள் பொறுப்புமிக்க சமூக ஊடகத்திற்கான அதன் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மகிழ்ச்சி மற்றும் படைப்பாற்றலை அடிப்படையாகக் கொண்ட மையமாக இருப்பதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் TikTok, உண்மையான மற்றும் நம்பகமான தகவல்களை வழங்கும் தளமாகவும் தன்னை உறுதிப்படுத்தியுள்ளது. தவறான மற்றும் பொய்யான தகவல்களுக்கு எதிராக போராடும் உண்மையான மற்றும் சரியான தகவல்களைக் கொண்ட டிஜிட்டல் சூழலை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்ல TikTok முயற்சி செய்து வருகிறது.

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...