2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள தபால் மூல வாக்களிப்பு முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க முதலிடத்தில் இருக்கின்றார்.
தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி, அவர் 154,657 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அவருக்கு அடுத்தப்படியாக உள்ள சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 51,982 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 48,970 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதேவேளை, இதுவரை வெளியாகியுள்ள தபால் மூல வாக்களிப்பு முடிவுகளில் பதினொரு மாவட்டங்களில் பத்து மாவட்டங்களில் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை, மாத்தறை, மொனராகலை, பொலன்னறுவை, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அறுரகுமார வெற்றி பெற்றார்.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வன்னி மாவட்டத்தில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளார்.