தேர்தல் நாளில் பொது போக்குவரத்தில் நெருக்கடி ஏற்படும்: வெளியான அறிவிப்பு

Date:

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களுக்காக 200 கோடி ரூபாவிற்கும் மேல் பேருந்துகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 100 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (17)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நாளைய தினம் நடைபெறவுள்ள கடைசி பொதுக் கூட்டங்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் குழுக்கள் சுமார் 1500 பேருந்துகளுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி அதிக பேருந்துகளை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக நாடு முழுவதும் சுமார் 500 பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தல் காரணமாக சுமார் 50 வீத பேருந்துகள் பொது மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தேர்தல் நடைபெறும் 21ம் திகதி 10 முதல் 15 வீதம் வரையான பேருந்துகளே சேவையில் ஈடுபடும். அன்றைய தினம் நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...