நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள்: கடிதங்கள் அனுப்பி வைப்பு

Date:

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளைப் பெறுவதற்கு நாடாளுமன்றத் தலைவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக ஐந்து நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நினைவூட்டல் கடிதங்களுக்குப் பிறகு, 169 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துப் பொறுப்பு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அவர் சுகயீனமுற்றிருப்பதால், சொத்துப் பொறுப்பு அறிக்கை பின்னர் சமர்ப்பிக்கப்படும் என அவரது செயலாளர் ஒருவர் நாடாளுமன்றத் தலைவர்களுக்கு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...