2024 ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் இன்னும் 65 வீதமான தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில் அனுரகுமார திசாநாயக்க 41 வீத வாக்குகளுடனும் சஜித் 31 வீத வாக்குகளுடனும் முன்னிலையில் உள்ளனர்.
இந்நிலையில் மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தின் பொரள்ளை தேர்தல் தொகுதியை தவிர ஏனைய தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த மாகணத்தின் முடிவுகளை வெற்றியாளரை தீர்மானிக்கும் வாக்குகளாக கருதப்படுகின்றன.
கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி, கொழும்பு மேற்கு, கொழும்பு கிழக்கு, தெஹிவளை, இரத்மலானை, கொலன்னாவை, கோட்டே, கடுவல அவிசாவளை ஹோமாகம, மஹகரம, கெஸ்பேவ, மொரட்டுவ, தேர்தல் தொகுதிகளிலும் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, பியகம, திவுலப்பிட்டிய, தொம்பே கம்பஹா ஜாஎல, கட்டான, களனிய, மஹர, மினுவாங்கொட, மீரிகம, நீர்கொழும்பு வத்தளை தேர்தல் தொகுதிகளில் களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த, பண்டாரகம பேருவளை புளத்சிங்கள, ஹொரன, களுத்துறை, மத்துகம பாணந்துறை கொஹுவல தேர்தல் தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவில்லை.