பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Date:

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 18ஆம் திகதி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

நேற்று (10) இடம்பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாசா தெரிவித்துள்ளார்.

பதுளை  பொது வைத்தியசாலையில் சேவையாற்றும் தமது சங்கத்தின் பிரதி செயலாளர் பாலித ராஜபக்சவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கையை நிறுத்தக் கோரி இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.

இதேவேளை, இன்று (11) முதல் நாடளாவிய ரீதியாகவுள்ள சகல வைத்தியசாலைகளிலும் கறுப்புக் கொடி பறக்கவிடத் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...