புத்தளம் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி 08 நிலையங்களில் ஆரம்பம்

Date:

புத்தளம் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி 08 நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் அதிகாரி எச்.எம்.எஸ்.பி ஹேரத் தெரிவித்துள்ளார்

இதேவேளை மாத்தளை மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட தேர்தல் அதிகாரி தேஜானி திலகரத்ன தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதலாவது முடிவை இன்று நள்ளிரவு வெளியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தற்போது மாவட்ட ரீதியாக அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கமைய நாடளாவிய ரீதியில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...