புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு : பரீட்சை ஆணையாளரின் முடிவு

Date:

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியான நிலையில் அந்த பரீட்சையின் முதலாம் வினாத்தாளின் மூன்று கேள்விகளை நீக்குவதற்கு பரீட்சைகள் ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் உள்ள மூன்று வினாக்களைப் போன்று மூன்று கேள்விகளை அவ்வவ் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாதிரித் தாள் மூலம் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி இன்று புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளை தயாரித்த குழு ஒன்று கூடி கலந்துரையாடப்பட்டு அது தொடர்பான மூன்று வினாக்களை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாளை (18) புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்லவுள்ளதாகவும், அவர்களின் அறிக்கையின் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...