லெபனானில் வாழும் இலங்கையர்களுக்கு உதவ தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகம்

Date:

லெபனானுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான முரண்பாடு அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள இலங்கையர்களுக்கு உதவும் வகையில் துரித தொலைபேசி இலக்கங்களை அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதனால் 558 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, சுமார் 1500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய முதலாவது செயலாளரான சனத் பாலசூரியவைத் தொடர்புக் கொள்ள 009 617 038 6754 என்ற தொலைப்பேசி இலக்கத்தையும் மூன்றாவது செயலாளரான பிரியங்கனி திஸாநாயக்கவை தொடர்புக் கொள்ள 009 618 154 9162 என்ற தொலைப்பேசி இலக்கத்தையும் தூதரகம் அறிமுகம் செய்துள்ளது.

மேலும், மொழிபெயர்ப்பாளருக்கான தொலைப்பேசி இலக்கமாக 009 618 136 3894 எனும் இலக்கமும் லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...