வத்தளை அல் அஷ்ரபிய்யா பள்ளிவாசலில் “ஸீரதுர் ரஸூல் நிகழ்ச்சிகள் “

Date:

இஸ்லாமிய கலண்டரின் மூன்றாவது மாதமான ரபிஉனில் அவ்வல் மாதம் முஸ்லிம்கள் மத்தியில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களுடைய சிறப்புக்களை அதிகமாக நினைவு கூருகின்ற, அவருடைய வாழ்வியலை பற்றி பேசுகின்ற, கருத்து பரிமாறுகின்ற இன்னோரன்ன பல நிகழ்வுகளை உள்ளடக்கி சிறப்பு பெற்ற ஒரு மாதமாகும்

இந்த புனித மாதத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

வருடாந்தம் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் கூட இது குறித்த அரச மட்டத்திலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.

அந்தவகையில் பல பள்ளிவாசல்களில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் பற்றிய ஸீரத்துர் றஸுல் பற்றின நிகழ்ச்சிகள் அண்மைக்காலமாக பரவலாக இடம்பெற்று வருகின்றமை பாராட்டுக்குரிய விடயம்.

இதன் வரிசையில் கொழும்புக்கு அண்மையில் உள்ள வத்தளை பகுதியில் அமைந்திருக்கின்ற அல் அஷ்ரபிய்யா பள்ளிவாசலில் இந்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிகின்ற இந்த ஸீரத்துர் றஸுல் நிகழ்ச்சி பயனுள்ள பல தலைப்புக்களில் சிறப்பான பல மார்க்க அறிஞர்களுடைய வழிக்காட்டலிலே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பம்மசமாகும்.

இவ்வாறான நிகழ்ச்சிகளினூடாக இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களைப் பற்றிய சிறப்பான சிறந்த விளக்கங்கள் தெளிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன் பெறுவது இக்காலகட்டத்திலே மிக முக்கியமானதொன்று என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

Popular

More like this
Related

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....