அகில இலங்கை ரீதியான காற்பந்தாட்ட போட்டியில் புத்தளம் அசன் குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயம் சம்பியன்

Date:

புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயத்தின் 16 வயதுக்குட்பட்ட காற்பந்தாட்ட அணி அநுராதபுரத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான காற்பந்தாட்ட போட்டியில் சம்பியனாகியுள்ளது.

இந்த பரபரப்பான இறுதிப்போட்டி இன்று திங்கட்கிழமை (14) காலை நடைபெற்றது.

வெட்டாளை அணியினர் காலிறுதிப்போட்டியில் மாத்தளை அஜ்மீர் கல்லூரியை 06 : 00 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.

அரை இறுதி போட்டியில் கண்டி ஜப்பார் மத்திய கல்லூரியை கடும் போட்டிக்கு மத்தியில் 03 : 00 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் வியாவிழன் மத்திய கல்லூரியுடன் போட்டியிட்ட புத்தளம் வெட்டாளை அசன் குத்தூஸ் அணியினர் 02 : 01 கோலினால் வெற்றி பெற்று சம்பியனாகியது.

அசன் குத்தூஸ் பாடசாலை அணி சார்பாக முஹம்மது அப்ரான், முஹம்மது இர்பான் ஆகியோர் கோல்களை செலுத்தினர்.

சுமார் 03 வருட காலம் பயிற்சிக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி தாம் மேற்கொண்ட பகீரத முயற்சியின் பலனாக இறைவன் தந்த  பரிசாகவே இந்த வெற்றியை தாம் கருதுவதாக அதிபர் ஜே.எம்.இல்ஹாம் வெற்றி திடலிலிருந்து உணர்வு பூர்வமாக தெரிவித்தார்.

இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வெற்றி வீரர்களுக்கு வழிகாட்டிய பாடசாலை அதிபர் ஜே.எம்.இல்ஹாம், பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.மொஹிதீன், உதவி அதிபர்கள், உடற்கல்வி போதனாசிரியர் அம்லாக் முஹம்மது, ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் அனைவருக்கும் புத்தளம் வாழ் பொதுமக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை பழைய மாணவர் அமைப்பான யூத் விஷன் அமைப்பினர் வெற்றி வீரர்களை புத்தளம் நகரமெங்கும் ஊர்வலமாக அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...