ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதி அநுரவுக்கு வாழ்த்து

Date:

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா புதிதாக பதவியேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், இலங்கையில் அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்தியமைக்காக இலங்கை மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

1966 ஆம் ஆண்டு தொடக்கம் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை சுட்டிக்காட்டிய அசகாவா, பல ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களிலும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதிலும் ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியான பங்காளியாக இருந்து வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமைத்துவமானது இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வலுவாக முன்னோக்கி கொண்டு செல்ல உதவும் எனவும் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் இலங்கை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வேலைத்திட்டத்தை புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் நிறைவேற்ற முடியும் எனவும் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...